https://www.youtube.com/playlist?list=PLAPrVB8wngPlZzRRNxiJvng4xwNCBOSyX
முழுமுதல் தெய்வமே, மூஷிக வாகனனே, முன்னே செல்பவனே, தடைகளை நீக்குவாய்! ஆணவம் போக்குபவனே, அன்பைத் தருபவனே, கருணை மழையாக எங்கள் மனம் நனைப்பாய்! மூலாதாரத்தின் மூண்டு எழு கனலை காலால் எழுப்பும் ஞானம் அளிப்பாய்! ஓம்.... ஓம்... ஓம். Suggestions to vselvaraj@vselvaraj.com Mobile:9843019701
Sunday, August 31, 2025
Thursday, August 28, 2025
வினாயகர் அகவல்
Monday, August 25, 2025
ஓம் ... ஓம் ... ஓம் .. ஓம் .. ஓம் ........எங்கள் இதயம் துடிக்கும் ஒலி புதிதாய் கேட்கும்
Monday, August 18, 2025
புண்ணியம் கோடி பெருகி வரும் பொய்மை வாழ்வு ஓடி மறையும்
புண்ணியம் கோடி பெருகி வரும்
பொய்மை வாழ்வு ஓடி மறையும்
எண்ணியவை கை கூடி வரும்
ஏற்ற துணை நன்கு அருள்வாய்
வாழ்வில் வளம் ஒளிர்ந்திடுமே
ஸ்ரீ செல்வ விநாயகனை
நாளும் வணங்கி மகிழ்வோம் நன்றே!
இதயம் கவரும் அழகு செல்வா
ஐங்கரனே பெரியோனே காரண காரிய விநாயகா
காரணம் இன்றி காரியம் இல்லை
அலங்காரம் செய்து வழிபடும் அடியார்க்கு
முழு ஞானம் புகழும் தேடி வரும்
யானை முகத்து வள்ளல் பெருமானே!
சீருடன் செல்வ விநாயகா உன் பாதம்
தொட்டு வாழ்ந்து மகிழ்ந்திடுவோம்
விஸ்வேஸ்வரா நகர் செல்வ விநாயகா
விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்
மோதகம் படைத்து மகிழ்ந்திடுவோம்
அனைவரும் போற்றி வழிபடுவோம்
பூஜை செய்து பாடி ஆடிடுவோம்
பக்தி மிகுந்து பிரார்த்தனை செய்வோம்
தடைகள் நீங்கி வெற்றி கிடைத்திடுமே
செல்வ விநாயகர் அருளினாலே!
விஸ்வேஸ்வரா நகர் கோயிலினில்
செல்வ விநாயகர் திருவிழாவே
விநாயக சதுர்த்தி உற்சவமே
விமர்சையாய் கொண்டாடிடுவோம்
மங்களம் பொங்கும் மகிழ்ச்சி நிறைந்து
மக்கள் கூடி வணங்கும் திருநாளே
செல்வ விநாயகர் பாதம் தொழுது
செழிப்பும் சந்தோஷமும் பெற்றிடுவோம்!
விஸ்வேஸ்வரா நகர் செல்வ விநாயக
அருள் பொழியும் அன்பு தெய்வமே
அடியார்களை காக்கும் அழகு செல்வா
விநாயக சதுர்த்தி தினத்தினிலே
விஸ்வேஸ்வரா நகரில் வாழ்த்திடுவோம்
புண்ணியம் பெருகும் பொழுதெல்லாம்
பக்தி பாடல் பாடி மகிழ்ந்திடுவோம்
செல்வ விநாயகர் அருளினாலே
சகலமும் சாத்தியம் ஆகிடுமே
நன்றி செலுத்தி நாளும் வணங்கிடுவோம்
நல்ல வாழ்வு நம்மை தழுவிடுமே
விஸ்வேஸ்வரா நகர் செல்வ விநாயகரே
நாளெல்லாம் வணங்கிடுவோம் நன்று !