Tuesday, January 7, 2020

புண்ணியம் கோடி வரும்
பொய் வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கை கூடும்
ஏற்றத் துணை நன்னிடவே
வாழ்வில் வள ரொளியாம்
ஸ்ரீசெல்வ விநாயகனை
நாளெல்லாம் வணங்கிடுவோம் நன்று

கணபதி தேவா
கஜமுக நாதா
ஸ்ரீ செல்வ விநாயக நாதா
நஞ்சைக் கொஞ்சித் தவழும்
நன்னிலமைத் திகழ்வோனே
நெஞ்சை அள்ளிச் செல்லும்
ஐங்கரனே பெருமானே

காரணக்காரிய செல்வ விநாயகர்
காரண மில்லாது காரிய மேதுமில்லை
தோரணமிட்டுத் தொழுகின்ற அடியவர்க்கு
பூரண ஞானம் புகழும் தேடிவர
வாரண மாகிய வள்ளல் பெருமானே
நாரணன் நான்முகன் நல்லரு ளீசன்
வாரண மாக்க வலம் வந்த காரணத்தால்
சீரெனச் செல்வ விநாயக நின் பதம்
ஊரென வாழ்வோம் உவந்து